பட்டா பதிவு செய்ய முடியாத சூழல்- 'காசா கிராண்ட்' அலுவலத்தில் பொதுமக்கள் போராட்டம்

Sinoj
சனி, 3 பிப்ரவரி 2024 (17:43 IST)
சென்னையில் உள்ள  காசா கிராண்ட் அலுவகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டுள்ளனர்.

சென்னையில் உள்ள காசா கிராண்ட் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

திருவான்மியூரில் உள்ள தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்ட 500க்கும் மேற்பட்ட மக்கள் அடுக்குமாடி குடியிருப்பு நிலம் அனாதினம் என்பதால் பட்டா பதிவு செய்ய முடியாத சூழல் என மக்கள் குற்றச்சாட்டை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தாழம்பூர் காசா கிராண்ட் ஸ்மார்ட் டவுன் அடுக்குமாடிகுடியிருப்பில் வீடு வாங்கியவர்கள். அடுக்குமாடி குடியிருப்பு நிலம் அனாதினம் என்பதால் பட்டா பதிவு செய்ய முடியாத சூழல் எனவும், கட்டுமான நிறுவனம் முறையான ஆவணங்களை வழங்கவில்லை என மக்கள் வேதனை தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்