''விஜய்யின் கட்சி பெயர் நன்றாக இருக்கிறது'' ....நடிகர்களை வைத்து மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்- முஸ்லிம் லீக் காதர் மொய்தீன்

Sinoj

சனி, 3 பிப்ரவரி 2024 (16:03 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர்  தனது  மக்கள் இயக்கம் மூலம் மக்களுக்கு உதவிகள் செய்து வந்த நிலையில்,  விரைவில் கட்சி தொடங்கப் போகிறார் என பல்வேறு தகவல் வெளியானது. 

இந்த நிலையில்,  நேற்று, நடிகர் விஜய் அதிகாரப்பூர்வமாக தமிழக வெற்றி கழகம் என்று தனது கட்சியின் பெயரை அறிவித்து, அக்கட்சியின் தலைவராக தனது முதல் அறிக்கையும் வெளியிட்டார்.

விஜய்யின் அரசியல் வருகை பற்றி, அமைச்சர் உதயநிதி , சீமான், ஜெயக்குமார், அண்ணாமலை, எஸ்.வி.சேகர் உள்ளிட்ட பலரும் கருத்து தெரிவித்தனர்.

இந்த  நிலையில்,இன்று இந்தியன் முஸ்லிம் லீக் கட்சித் தலைவர் காதர் மொய்தீன், புதிய கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய்க்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:  நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் என்கின்ற கட்சியின் பெயர் நன்றாக இருக்கிறது. அவருக்கு என் வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.
 

தமிழ்நாட்டில் பெயர்களை வைத்தோ, நடிகர்களை வைத்தோ மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் தமிழ் மொழி, பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றை  உள்ளடக்கிய கொள்கையைப் பின்பற்றும் கட்சியாக இருப்பது திமுகதான்.  பெரியார்போட்ட விதை. அதை அண்ணா, கலைஞர் பின்பற்றினர். திமுகவிற்கு ஈடாக தற்போது எந்தக் கட்சியில்லை. திடீரென வந்து ஒருவர் வந்து எல்லாவற்றையும் மாற்றிவிட முடியாது என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்