2026 தேர்தலில் 6 முதல்வர் வேட்பாளர்கள் போட்டியா? யார் யார்?

Mahendran

சனி, 3 பிப்ரவரி 2024 (14:29 IST)
இதுவரை இல்லாத அளவில் வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தல் வித்தியாசமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.  இதற்கு முந்தைய தேர்தல் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகள் மட்டுமே நேரடியாக மோதியது என்பதும் இரண்டு முதல்வர் வேட்பாளர்கள் மட்டுமே இருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் சீமானும் முதல்வர் போட்டியில் இருந்தார்.

ஆனால் வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் 6 முதல்வர் வேட்பாளர்கள் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக சார்பில் முக ஸ்டாலின், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக சார்பில் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சியின் சார்பில் சீமான், பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ் மற்றும் தமிழக வெற்றி கழகம் சார்பில் விஜய் ஆகியோர் முதல்வர் வேட்பாளராக  போட்டியிடுவார்கள்.

இந்த ஆறு முதல்வர் வேட்பாளர்களில் யார் 2026 ஆம் ஆண்டு வெற்றிக்கனியை பறிப்பார்கள்? யார் முதல்வர் பதவியை பிடிப்பார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.  

அன்புமணி மற்றும் சீமான் ஆகிய இருவருக்கும்  முதல்வர் பதவிக்கு வாய்ப்பு இல்லை என்றாலும் மீதமுள்ள நால்வருக்கும் கடும் போட்டி இருக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்