கடைசில இவரு மட்டும்தான் இருப்பாரு போல... கேர்லெஸ்ஸாக இருக்கும் டிடிவி தினகரன்!

Webdunia
புதன், 19 ஜூன் 2019 (10:44 IST)
டிடிவி தினகரன் துவங்கிய அமமுக கட்சியில் இருந்து நிர்வாகிகள் விலகி வரும் நிலையில், அதை பற்றி கொஞ்சமும் கவலையில்லாமல் இருக்கிறாராம் தினகரன். 
 
அமமுக தமிழகத்தில் உள்ள திமுக மற்றும் அதிமுகவிற்கு மாற்று கட்சியாக இருக்கும் என எதிர்பார்த்த நிலையில் மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் முடிவுகள் அக்கட்சிக்கு பேரிடியாக வந்து விழுந்தது.   
 
தமிழ்நாட்டின் 300க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் அமமுகவிற்கு ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை. இந்த தேர்தல் முடிவு டிடிவி தினகரனை தமிழக மக்கள் அங்கீகரிக்க வில்லை என்பதையே காட்டுகிறது. இதனால் கட்சியில் இருந்து பலர் வெளியேறிக் கொண்டிருக்கின்றனர்.
அனால், தினகரன் இதை எதை பர்றியும் கவலை படாமல், இருந்தால் இருக்கட்டும்; போனால் போகட்டும் என்று கேர்லெஸ்ஸாக இருக்கிறாராம். கட்சியில் இருந்து வெளியேறும் நிர்வாகிகளை பிடித்து வைக்க டிடிவி தினகரன் எந்த முயற்சியும் மேற்கொள்வதில்லை என நிர்வாகிகள் புலம்புகின்றன. 
 
தினகரனை பொறுத்தவரை, கட்சியைவிட்டு வெளியேற முடிவெடுத்தவர்களை ஒன்றும் செய்ய முடியாது என்ற நிலைப்பாட்டில் உள்ளாராம். போக வேண்டும் என முடிவு செய்தவர்களை இழுத்து பிடிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை என அவர் கருதுகிறாராம். அப்படியே போன கடைசியில் கட்சியில அவரு மட்டும்தான் இருப்பாரு போல... 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்