சதீஷ், சத்ய பிரியா ஆகிய இருவரும் காதலித்து வந்ததாகவும், சதீஷின் நடவடிக்கை பிடிக்காததால் அவர் பிரிய சத்யா முயற்சி செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சதீஷ், சத்யாவை ரயில் முன்பு தள்ளிவிட்டு கொலை செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வழக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னை அல்லி குளத்தில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் நடந்த நிலையில் இன்று அதிரடியாக தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பில் சதீஷ் குற்றவாளி என தீர்ப்பளித்த நீதிபதி, அவருக்கான தண்டனை விவரங்களை டிசம்பர் 30ஆம் தேதி தெரிவிப்பதாக கூறியுள்ளார். இந்த தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.