பீகாரில் மாறுகிறதா அரசியல் நிலவரம்? நிதிஷ்குமார் - லாலு பிரசாத் யாதவ் கூட்டணி?

Siva

வெள்ளி, 27 டிசம்பர் 2024 (12:15 IST)
பீகாரில் தற்போது நிதீஷ் குமார் தலைமையிலான ஜனதா தளத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சிக்கு பாஜக ஆதரவு கொடுத்துள்ள நிலையில், பாஜக ஆதரவுடன் நடக்கும் இந்த ஆட்சி நீடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
 
பீகாரில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தல் குறித்து பீகாரின் முதல்வர் வேட்பாளர் பற்றிய ஆலோசனை நடைபெறும் என்று சமீபத்தில் அமித்ஷா குறிப்பிட்டார். இதனால், முதல்வர் வேட்பாளராக நிதீஷ் குமார் நீடிக்க முடியாது என்ற செய்தி தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இருப்பினும், பீகாரின் ராஷ்ட்ரிய ஜனதா தளமும் பாஜக கூட்டணியும் தொடரும் என்று கூறப்பட்ட நிலையில், திடீர் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது. இந்த நிலையில் லாலு பிரசாத் யாதவ் மற்றும் நிதீஷ் குமார் கூட்டணி உருவாகும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
இதற்கான பேச்சுவார்த்தைகள் திரை மறைவில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த கூட்டணி அமைந்தால், முதல்வர் வேட்பாளராக நிதீஷ் குமார் பெயரிடப்படுவார் என்று கூறப்படுகிறது. இதனால், பாஜக கூட்டணியை விட்டு வெளியேறி, லாலுவுடன் நிதீஷ் குமார் கூட்டணி வைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இது நடக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்