சென்னையின் பல பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடும் நிலையில் மக்கள் தண்ணீருக்காக திண்டாடி வருகின்றனர். ஆனால், நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் தண்ணீரை வைத்து சுய விளம்பரம் செய்து வருகின்றனர் என குற்றாச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னை ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் பகுதியில் தண்ணீருக்கு எந்த தட்டுப்பாடும் இல்லை. ஆனால், நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் சுய விளம்பரத்திற்காக தண்ணீரை அரசியலாக்கி ஏரியில் இருந்து அசுத்தமான நீரை உறிஞ்சி மக்களுக்கு வழங்கியதாக புகார் எழுந்துள்ளது.
2 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் வரும் இந்த பகுதிக்கு எதற்காக தண்ணீர் கொண்டு வந்து கொடுக்க வேண்டும், தண்ணீர் இல்லாத பகுதிக்கு கொண்டு சென்று கொடுக்கலாமே என கேட்ட அந்த பகுதி கவுன்சிலர் மீதும் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பிவிட்டுள்ளனராம்.