தமிழில் பதவியேற்றது பெரிய சாதனையா? மிகைப்படுத்தும் மீடியாக்கள்!

செவ்வாய், 18 ஜூன் 2019 (21:31 IST)
தமிழக எம்பிக்கள் 39 பேர்களும் இன்று தமிழில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர். இதுகுறித்து அனைத்து ஊடகங்களிலும் தலைப்பு செய்தி, பிரேக்கிங் செய்திகளாக வெளிவந்து கொண்டிருக்கின்றது.
 
கடந்த ஐம்பது ஆண்டுகளாக தமிழக அரசியல்வாதிகள் தமிழை வைத்து வியாபராம் செய்து தான் பிழைப்பு நடத்தி வருகின்றனர். தமிழ், தமிழ் என்று பேசும் இந்த அரசியல்வாதிகளின் வாரிசுகள் அனைவரும் இந்தியில் நல்ல புலமை பெற்றவர்கள். இவர்கள் நடத்தும் பள்ளிகள் அனைத்திலும் இந்தி மொழி  உண்டு என்பது மட்டுமின்றி ஆங்கிலத்திற்குத்தான் முதலுரிமையும் கொடுக்கப்பட்டும். 
 
அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்கள் எந்த காரணத்தை முன்னிட்டும் இந்தி படித்துவிடக்கூடாது என்ற கொள்கையுடன் இந்தியை எதிர்த்து வரும் அரசியல்வாதிகள் தமிழுக்காக குரல் கொடுப்பது போல் நடிப்பது புதிது அல்ல. இனியும் தமிழ் வியாபாரம் செய்யும் அரசியல்வாதிகளை நம்பி மக்கள் ஏமாற தயாராக இல்லை
 
வழக்கம்போல் ஒருபிரிவு அரசியல்வாதிகளுக்கு ஜால்ரா அடிக்கும் ஊடகங்கள் தமிழில் பதவியேற்றதை பெரும் சாதனை போல் செய்திகளை வெளியிட்டு வருகின்றனர். கர்நாடக எம்பிக்கள் சிலர் கன்னடத்திலும், தெலுங்கானா, ஆந்திர மாநில எம்பிக்கள் பலர் தெலுங்கிலும் பதவியேற்றனர். ஆனால் அங்குள்ள ஊடகங்கள் இதைப்பற்றி ஒரு பெட்டி செய்திகூட வெளியிடவில்லை. ஆனால் தமிழ் ஊடகங்கள் மட்டும் தமிழில் பதவியேற்றதை மிகைப்படுத்தி வருவதாக நெட்டிசன்கள் குறிப்பிட்டு வருகின்றனர்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்