டிடிவி தினகரனுக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்...

Webdunia
வியாழன், 1 ஜூன் 2017 (14:25 IST)
இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்ததாக எழுந்த புகாரில், டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் டிடிவி தினகரனுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.


 

 
இரட்டை இலை சின்னத்தை பெற, டெல்லியை சேர்ந்த இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் மூலமாக ரூ.50 கோடி பேரம் பேசியதாகவும், அதற்காக ரூ.10 கோடியை முன்பணமாக கொடுக்கப்பட்டதாகவும், டிடிவி தினகரன் மற்றும் அதற்கு உடைந்தையாக இருந்த அவரின் நண்பர் மல்லிகார்ஜுனா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்த டெல்லி போலீசார் அவர்களை கைது செய்து டெல்லி திகார் சிறையில் அடைத்தனர்.
 
இந்நிலையில், அவர்கள் இருவர் தரப்பிலும் டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தீர்ப்பளித்த நீதிமன்றம், டிடிவி தினகரன் மற்றும் மல்லிகார்ஜூனா ஆகிய இருவரும் ரூ.5 லட்சம் செலுத்தி சொந்த ஜாமீனில் செல்லலாம் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதேபோல், அவர்கள் இருவரும் தங்களின் பாஸ்போர்ட்டுகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும், சாட்சிகளை கலைக்க கூடாது உள்ளிட்ட சில நிபந்தனைகளோடு இந்த ஜாமீனை நீதிமன்றம் வழங்கியுள்ளது.
 
தற்போது ஜாமீன் கிடைத்து விட்டதால் இன்னும் ஓரிரு நாளில் டிடிவி தினகரன் சென்னை திரும்புவார் எனத் தெரிகிறது.
அடுத்த கட்டுரையில்