துள்ளலில் அமமுக: ஜெ. சமாதியில் குஷியான செய்தி சொன்ன டிடிவி!!

Webdunia
செவ்வாய், 17 டிசம்பர் 2019 (13:38 IST)
இந்திய தேர்தல் ஆணையத்தின் கடிதத்தின் அடிப்படையில் அமமுகவுக்கு பொதுச்சின்னம் வழங்க மாநில தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது என டிடிவி தினகரன் செய்தி வெளியிட்டுள்ளார். 

 
 
முன்னதாக அமமுக கட்சியை பதிவு செய்யும் பணி நடந்துகொண்டிருப்பதால், வேலூர் நாடாளுமன்ற தேர்தலிலும், விக்கிரவாண்டி நாங்குநேரி இடைத்தேர்தலிலும் அக்கட்சி போட்டியிடவில்லை.   
 
இந்நிலையில் தற்போது அமமுக கட்சியாக பதிவு செய்யப்பட்டுவிட்டது. உள்ளாட்சி தேர்தலிலும் அமமுக போட்டியிட உள்ளது. இது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியதாவது, தற்போது நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் தமிழகம் முழுவதும் ஒரே சின்னத்தில் அமமுக போட்டியிடும் என தெரிவித்தார்.
 
ஆனால், உள்ளாட்சித் தேர்தலில் டிடிவி தினகரனின் அமமுகவுக்கு தனிச்சின்னம் வழங்க மாநில தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. இதனைத்தொடர்ந்து அமமுக சார்பில் இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் முறையிடப்பட்டது. 
 
இதற்கு தற்போது பலனும் கிடைத்துள்ளது. ஆம் இந்திய தேர்தல் ஆணையத்தின் கடிதத்தின் அடிப்படையில் அமமுகவுக்கு பொதுச்சின்னம் வழங்க மாநில தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. 
 
இந்த செய்தியை டிடிவி தினகரன் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்று அமமுக கட்சியாக பதிவு செய்யப்பட்ட சான்றிதழை அங்கு வைத்து ஆசி பெற்று பின் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அமமுகவினர் மகிழ்ச்சியில் உள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்