முன்னதாக அமமுக கட்சியை பதிவு செய்யும் பணி நடந்துகொண்டிருப்பதால், வேலூர் நாடாளுமன்ற தேர்தலிலும், விக்கிரவாண்டி நாங்குநேரி இடைத்தேர்தலிலும் அக்கட்சி போட்டியிடவில்லை.
இந்நிலையில் தற்போது அமமுக கட்சியாக பதிவு செய்யப்பட்டுவிட்டது. உள்ளாட்சி தேர்தலிலும் அமமுக போட்டியிட உள்ளது. இது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியதாவது, தற்போது நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் தமிழகம் முழுவதும் ஒரே சின்னத்தில் அமமுக போட்டியிடும். ஒரே சின்னத்தை ஒதுக்க கோரி நீதிமன்றத்தை நாடுவோம். எங்களுக்கு நீதி தேவதை துணை இருக்கிறார் என பேசினார்.
ஆனால், தற்போது உள்ளாட்சித் தேர்தலில் டிடிவி தினகரனின் அமமுகவுக்கு தனிச்சின்னம் வழங்க மாநில தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டதாக அமமுக பொருளாளர் வெற்றிவேல் பேட்டி அளித்துள்ளார். இதனைத்தொடந்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் பேட்டியளித்துள்ளார். அவர் கூறியதாவது...