ஹீராபென் மறைவுக்கு அஞ்சலி செலுத்த பாஜக அலுவலகங்களிலும் ஏற்பாடு!

Webdunia
வெள்ளி, 30 டிசம்பர் 2022 (12:34 IST)
பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மறைவுக்கு அஞ்சலி செலுத்த, அனைத்து பாஜக அலுவலகங்களிலும் ஏற்பாடு.


பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இன்று குஜராத்தில் அவரது இறுதி சடங்குகள் நடைபெற்ற நிலையில் குஜராத் சென்ற பிரதமர் மோடி தனது தாயின் இறுதி காரியங்களில் கலந்து கொண்டு மகனாக தனது கடமைகளை நிறைவேற்றினார். 

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மறைவுக்கு அஞ்சலி செலுத்த, அனைத்து பாஜக அலுவலகங்களிலும், பொதுமக்கள் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இன்று மாலை 4.30 மணி முதல் மாலை 6.00 வரை, சென்னை பாஜக தலைமை அலுவலகம் கமலாலயத்திலும், மற்றும் ஒவ்வொரு மாவட்ட தலைமை அலுவலகத்திலும், அன்னை ஹீராபென் திருஉருவப் படத்திற்கு கட்சியின் நிர்வாகிகளும், உறுப்பினர்களும், பொதுமக்களும் மலர் அஞ்சலி செலுத்துகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்