பிரபல விஜய் டிவி சீரியல்களின் இயக்குனர் தாய் செல்வம் மரணம்!
வெள்ளி, 16 டிசம்பர் 2022 (08:25 IST)
காத்து கருப்பு, மௌனராகம் சீசன்-1, நாம் இருவர் நமக்கு இருவர், தாயுமானவன், கல்யாணம் முதல் காதல் வரை, பாவம் கணேசன், தற்போது ஒளிபரப்பாகும் ஈரமான ரோஜாவே சீசன் 2 என்று பிரபலமாக ஒளிபரப்பான பல விஜய் தொலைக்காட்சி சீரியல்களை இயக்கியவர் இயக்குநர் தாய் செல்வம்.
இன்று அவர் காலமானதை அடுத்து விஜய் டிவி அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளது. பல திரையுலக பிரபலங்களும் அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.