இரவோடு இரவாக மூடப்பட்ட டிரெக்கிங் நிறுவனம்

Webdunia
திங்கள், 12 மார்ச் 2018 (11:40 IST)
தேனி அருகே உள்ள குரங்கணி காட்டுப்பகுதிக்கு டிரெக்கிங் சென்ற பெண்கள் திடீரென ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி கொண்டதால் அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் பெண்களையும் சிறுவர்களையும் டிரெக்கிங் அழைத்து சென்றது சென்னையை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் என்றும், இந்த டிரெக்கிங் எந்தவித அனுமதியும் இன்றி மேற்கொள்ளப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இதுகுறித்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியபோது, 'அனுமதியின் டிரெக்கிங் மேற்கொண்டதால் விபத்து நேர்ந்துள்ளது. முன் அனுமதி பெற்றிருந்தால் உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கும் என்று கூறினார்

இந்த நிலையில் சென்னையில் இருந்து பெண்களையும் சிறுவர்களையும் குரங்கணிக்கு டிரெக்கிங் அழைத்து சென்ற தனியார் நிறுவனம் இரவோடு இரவாக மூடப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. பாலவாக்கத்தில் ஒரு வீட்டில் நடத்தி வந்த இந்த அலுவலகத்தின் பெயர்பலகை அகற்றப்பட்டு, பூட்டப்பட்ட நிலையில் நேற்று இரவு முதல் இருப்பதாகவும் இதன் நிறுவனர் தலைமறைவாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது

இந்த டிரெக்கிங் கிளப்பில் சுமார்  40 ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளதாக கூறப்படுகிறது. கோடையில் டிரெக்கிங் செல்வதை பொதுவாக அனுமதிக்கவில்லை, இந்த நிலையில் இந்த டிரெக்கிங் நிறுவனம் சிறுவர்களையும் அழைத்து கொண்டு டிரெக்கிங் சென்றது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்