தேனி அருகே உள்ள குரங்கணி காட்டுப்பகுதியில் நேற்று முதல் கொளுந்துவிட்டு எரியும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்பு துறையினர் மற்றும் மீட்புக்குழுவினர் திணறி வருகின்றனர். இந்த நிலையில் இந்த மலையில் டிரெக்கிங் சென்ற சுமார் 40க்கும் மேற்பட்ட மாணவிகளை மீட்பதில் இந்திய விமானப்படை வீர்ர்கள் மற்றும் கமாண்டோ படையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை 8 மணி வரை 8 பேர் பலியாகியிருந்த நிலையில் சற்றுமுன் வந்த தகவலின்படி பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.சென்னையை சேர்ந்த புனிதா, அருண், பிரேமலதா, சுபா, விபின் மற்றும் அகிலா ஆகியோர்களும், ஈரோட்டை சேர்ந்த விஜயா, விவேக், மற்றும் தமிழ்ச்செல்வி ஆகியோர்கள் பலியானவர்கள் என்று தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஒருசிலர் ஆபத்தான நிலையில் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.