வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோர பகுதிகளில் நிலவி வருகிறது. இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்னும் சில நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்தது.
இந்த நிலையில், டிசம்பர் 24ஆம் தேதி வட கடலோர தமிழகத்தில் சில பகுதிகளிலும், தமிழகத்தின் பிற பகுதிகளில் சில இடங்களிலும் மழை பெய்யும். டிசம்பர் 25ஆம் தேதி வட தமிழகத்தின் பல பகுதிகளில், தென் பகுதியின் சில பகுதிகளில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 26 மற்றும் 27ஆம் தேதிகளில் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும், டிசம்பர் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொருத்தவரை, அடுத்த 24 மணி நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
எனவே, டிசம்பர் 29ஆம் தேதி வரை, அதாவது டிசம்பர் மாத இறுதி வரை மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால், பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.