காட்டுத்தீயில் பலியானவர்களுக்கு கமல் இரங்கல்

திங்கள், 12 மார்ச் 2018 (09:36 IST)
தேனி அருகேயுள்ள மலைப்பகுதியான குரங்கணி வனப்பகுதியில் நேற்று மாலை முதல் காட்டுத்தீ கட்டுக்கடங்காமல் எரிந்து வருகிறது. இந்த பகுதியில் காற்று பலமாக வீசுவதால் தீயை அணைப்பதில் சிரமம் உள்ளதாக தீயணைப்பு படையினர் தெரிவித்து வருகின்றனர்.

இருப்பினும் தீயில் சிக்கிய மாணவிகளை மீட்க இந்திய விமானப்படை, கமாண்டோ படை, தீயணைப்பு படை மற்றும் உள்ளூர் மக்கள் ஆகியோர் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை எட்டுபேர் பலியாகியிருந்தாலும் மீதமுள்ளவர்களை உயிருடன் மீட்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டரில் பலியானவர்களுக்கு இரங்கலும், காயமடைந்தவர்களுக்கு ஆறுதலும் மீட்புப்படையினர்களுக்கு வணக்கமும் தெரிவித்துள்ளார் அவர் தனது டுவிட்டில் கூறியிருப்பதாவது: கருங்குணி. விபத்து மனதைப் பிழியும் சோகம். பிழைத்தவர் நலம் பெற வேண்டும். மீட்புப் பணியில் ஈடுபடுவோர் அனைவருக்கும் என் வணக்கங்கள். மாண்டவரின் உற்றாருக்கும் உறவினருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்
 

குரங்கணி விபத்து மனதைப் பிழியும் சோகம். பிழைத்தவர் நலம் பெற வேண்டும். மீட்புப் பணியில் ஈடுபடுவோர் அனைவருக்கும் என் வணக்கங்கள். மாண்டவரின் உற்றாருக்கும் உறவினருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்

— Kamal Haasan (@ikamalhaasan) March 12, 2018

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்