தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி வனப்பகுதியில் ட்ரெக்கிங் சென்ற சுமார் 40-க்கும் மேற்பட்ட கோவை, ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த கல்லூரி மாணவிகள் திடீரென ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கியுள்ளனர். இதில் ஒரு மாணவி உயிரிழந்துள்ளதாகவும் ஐந்து மாணவிகளுக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து மாணவிகளை மீட்கும் வகையில் தீயணைப்பு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். மேலும் சம்பவ இடத்திற்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களும் தேனி மாவட்ட ஆட்சியரும் விரைந்துள்ளனர்.