கொரோனா வைரஸ் பாதிப்பு ஒவ்வொரு நாளும் அதிகரித்து செல்வதை அடுத்து மருத்துவமனையில் படுக்கை வசதி இல்லாத நிலை ஏற்பட்டு வருவதால் நோயாளிகளை கட்டில் இல்லாமல் தரையில் படுக்க வைத்து சிகிச்சை பெற்று வரும் அவலநிலை ஏற்பட்டு வருகிறது
இந்த நிலையில் புதுவையில் உள்ள ஒரு மருத்துவமனையில் இறந்த உடலுக்கு மத்தியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரியில் உள்ள கதிர்காமம் என்ற அரசு மருத்துவமனையில் கொரோனாவால் சமீபத்தில் அனுமதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் திடீரென உயிரிழந்தார். அவரை எடுத்து பிண அறையில் வைப்பதற்கு கூட நேரமின்றி மருத்துவமனை ஊழியர்கள் பிஸியாக இருந்தனர்
இதனால் இறந்த உடல் ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. அது மட்டுமின்றி கட்டிலில் இடம் இல்லாத காரணத்தினால் பலர் தரையில் படுக்க வைத்து சிகிச்சை அளிப்பதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருப்பவர்கள் நரக வேதனை அனுபவிக்க வேண்டும் என்றும் என்பதால் ஒவ்வொருவரும் தங்களுடைய உடலை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது