கொரோனா நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை...அரசாணை வெளியீடு

திங்கள், 10 மே 2021 (19:02 IST)
தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கும் என்ற அரசாணை முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு  வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் ஒருநாளில் சுமார் 4 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் கொரொனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தினமும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர். 

தமிழகத்தில் கொரொனாவால் நாள்தோறும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

மக்களைக் கொரொனா தொற்றிலிருந்து பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

அந்தவகையில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கும் என்ற அரசாணை முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு  வெளியிட்டுள்ளது.
தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற ஸ்டாலின் பதவியேற்றதும் கொரோனா நோயாளிகளுக்கு  இலவச சிகிச்சை அளிக்கப்படும் என அறிவித்த நிலையில் தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்