மருத்துவமனைகளில் படுக்கை காலி இல்லை: வீட்டில் இருந்து கட்டில் கொண்டு வரும் நோயாளிகள்!

செவ்வாய், 11 மே 2021 (11:48 IST)
வீட்டில் இருந்து கட்டில் கொண்டு வரும் நோயாளிகள்!
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை மருத்துவமனையில் அட்மிட் செய்ய படுக்கை வசதி இல்லாத நிலை கிட்டத்தட்ட அனைத்து மருத்துவமனைகளிலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் பெங்களூரை சேர்ந்த பெண் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு படுக்கை காலி இல்லை என்று கூறப்பட்டதை அடுத்து அவர் கடந்த 48 மணிநேரமாக மருத்துவமனையின் வாசலிலேயே காத்திருப்பதாக தெரிகிறது.
 
இந்த நிலையில் தனது தாயாருக்கு அவரது மகன் வீட்டில் இருந்து கட்டில் கொண்டு வந்து மருத்துவமனையில் வெளியே போட்டு அதில் தாயாரை படுக்கவைத்து ஆக்சிஜன் கொடுத்து கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன
 
இந்த பெண்ணுக்கு சில மணி நேரத்துக்கு முன்புதான் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி கிடைத்தது என்பதும் தற்போது அவரது நிலைமை மோசமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்