இனி இரவு நேரத்திலும் அனுமதி.. மின்னொளியில் ஜொலிக்கும் மாமல்லபுரம் கடற்கரை கோயில்

Webdunia
ஞாயிறு, 16 ஜூலை 2023 (11:03 IST)
மாமல்லபுரம் கடற்கரை கோயில் பகலில் மட்டுமே பார்க்க அனுமதி என்ற நிலையில் தற்போது இரவிலும் பார்க்க அனுமதி என்று மத்திய தொல்லியல் துறை அறிவித்துள்ளது. எனவே இனி சுற்றுலா பயணிகள் மாமல்லபுரம் கடற்கரை கோயிலை இரவு நேரத்திலும் சுற்றி பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இரவில் வரும் சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக மாமல்லபுரம் கடற்கரை கோயில் மின்விளக்கு வெளிச்சத்தில் ஒளிர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இரவில் வரும் சுற்றுலா பயணிகள் மின்னொளியில் மின்னும் கடற்கரை கோயிலை பார்த்து மகிழ்வது புகைப்படம் மற்றும் வீடியோ மூலம் எடுத்து வருகின்றனர். 
 
இரவு நேரத்தில் கடற்கரை கோவிலுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் மற்ற இடங்களுக்கு இரவு நேரத்தில் பார்க்க அனுமதி வழங்கப்படவில்லை என்றும் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்