தாம்பரம் - சென்னை கடற்கரை மின்சார ரயில் நிறுத்தம்.. கூடுதலாக இயக்கப்படும் மெட்ரோ..!

Webdunia
திங்கள், 30 அக்டோபர் 2023 (16:10 IST)
தாம்பரம் - சென்னை கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நிறுத்தம் காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் பச்சை மற்றும் நீலம் ஆகிய இரண்டு வழித்தடங்களில் கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.  

விம்கோ நகர் பணிமனை மெட்ரோ முதல் விமான நிலையம் மெட்ரோ வரை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை 6 நிமிட இடைவேளையில் மெட்ரோ ரயில் இயக்கப்படும்.

அதேபோல் ஆலந்தூர் மெட்ரோ முதல் வண்ணாரப்பேட்டை மெட்ரோ வரை இயக்கப்படும் மெட்ரோ ரயில் காலை 8 மணி முதல் இரவு 11 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை  மூன்று நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.  

தாம்பரம் மற்றும் கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை  அக்டோபர் 31  அன்று அதாவது நாளை நிறுத்தப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளதை அடுத்து நாளை ஒரு நாள் மட்டும் இந்த சேவை நீடிக்கப்படுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்