தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வீடு அருகே மாநகராட்சியிடம் முன் அனுமதி பெறாமல் கொடிக்கம்பத்தை நட்டு, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தியதாகவும், கொடிக்கம்பத்தை அகற்றும் முயற்சியில் ஈடுபட்ட போது பாஜகவினர் போராட்டம் செய்ததாகவும் கூறினார்.
மேலும் பாஜகவினர் மாநகராட்சிக்கு சொந்தமான ஜே.சி.பி இயந்திரத்தை உடைத்தனர் என்றும், இதனால் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, 5 பேரை சிறையில் அடைத்துள்ளதாகவும் காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
முன்னதாக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலையின் வீட்டின் முன் பாஜகவின் கொடிக்கம்பம் நிறுவப்பட்டதற்கு இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததா கூறியதோடு, கொடிக்கம்பம் நிறுவப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தியதாகவும் செய்தி வெளியானது.
இந்த விவகாரம் தொடர்பாக, சென்னை காவல்துறை அதிகாரிகள், இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பிறகு போலீசாரால் கொடிக்கம்பம் அகற்றப்பட்டது.