தொடர் விடுமுறை.. சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்! – மெட்ரோ சேவை நேரம் நீட்டிப்பு!

வியாழன், 19 அக்டோபர் 2023 (15:57 IST)
தொடர் விடுமுறை காரணமாக மக்கள் பலரும் சொந்த ஊர்களுக்கு செல்வதால் மெட்ரோ ரயில் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.



சனி, ஞாயிறு விடுமுறையை தொடர்ந்து சரஸ்வதி பூஜை, விஜயதசமி என தொடர் விடுமுறைகள் வருவதால் மக்கள் பலரும் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். இதனால் சென்னையிலிருந்து பல ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சென்னை செண்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையம், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளுக்கு மக்கள் அதிகமாக செல்வார்கள் என்பதால் மெட்ரோ ரயில் சேவை நேரம் நீடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மெட்ரோ வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊர் செல்லும் மக்கள் வசதிக்காக நாளை 20.10.2023 மற்றும் நாளை மறுநாள் 21.10.2023 ஆகிய இரண்டு நாட்களுக்கு மெட்ரோ ரயில் சேவை இரவு 10 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

10 மணி வரை மெட்ரோ ரயில் சேவைகள் இரண்டு வழித்தடங்களிலும் 9 நிமிட இடைவெளிக்கு பதிலாக 6 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். இந்த நேர நீட்டிப்பு குறிப்பிட்ட இந்த இரண்டு நாட்களுக்கு மட்டுமே என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்