தமிழகத்தில் இன்று 771 பேர்களுக்கு கொரோனா தொற்று; அதிர்ச்சி தகவல்

Webdunia
புதன், 6 மே 2020 (20:03 IST)
தமிழகத்தில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவலை நாள்தோறும் சுகாதாரத்துறை தெரிவித்து வரும் நிலையில் இன்று மட்டும் 771 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை தமிழக மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
 
இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 4829ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்று கொரோனாவால் பாதிப்பு அடைந்த 771 பேர்களில் சென்னையில் மட்டும் 324 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பேர்கள் என்றும் இதனையடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2328ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 2 பேர் பலியாகியுள்ளதை அடுத்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை 35ஆக உயர்ந்துள்ளது என்பதும், தமிழகத்தில் இன்று மட்டும் 13,281 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. 
 
இன்றைய கொரோனா பாதிப்பில் அரியலூர் மிகப்பெரிய இடத்தை பிடித்துள்ளது. இங்கு மட்டும் 188 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற பகுதிகளில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்கள் குறித்த எண்ணிக்கையை கீழ்க்கண்ட அட்டவணையில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்