சென்னை தவிர தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைத்துள்ளது. மதுக்கடைக்கு வருபவர்கள் சமூக விலகலை பின்பற்ற வேண்டும் என்றும் மதுக்கடைகளுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஏற்கனவே ஒரு சில அறிவுறுத்தல்களை தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தமிழகத்தில் மதுகடைகளை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றும் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையின்போது மதுக்கடைகளை திறப்பதற்கு பதிலாக ஆன்லைனில் மதுக்களை விற்பனை செய்யலாமே என்று சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த தமிழக அரசு ஆன்லைனில் விற்பனை செய்ய முடியாது என்றும் ஆனால் மதுக்கடைகளில் சமூக இடைவெளியை பின்பற்ற அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய அரசு தயாராக உள்ளது என்றும் அறிவித்தது
இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்ததை அடுத்து சற்றுமுன் தீர்ப்பு வெளியாகி உள்ளது. இந்த தீர்ப்பில் தமிழகத்தில் நாளை மதுக்கடைகளை திறக்க தடை இல்லை என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஆனால் அதே நேரத்தில் சமூகவிலகல், பாதுகாப்பு வழிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்