டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இது குறித்து தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.
18.36 லட்சம் பேர் குரூப் 4 தேர்வு எழுதி உள்ள நிலையில் தேர்வு எழுதிய அனைவரும் இதன் முடிவுக்காக காத்திருக்கின்றனர். இந்த நிலையில் இது குறித்து தேர்வு கட்டுப்பாடு அதிகாரி கூறியபோது குரூப் 4 விடைத்தாள்களின் இரு பாகங்கள் தனித்தனியாக ஸ்கேன் செய்யப்படுகிறது என்றும் 18 லட்சத்திற்கும் அதிகமான விடைத்தாள்களை ஸ்கேன் வேண்டியுள்ளதால் முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஆகிறது என்றும் தெரிவித்துள்ளார்
மேலும் டிஎன்பிசி குரூப் 4 தேர்வு முடிவுகள் வரும் மார்ச் மாதம் வெளியாகும் என்றும் அவர் கூறியுள்ளார். தேர்வு முடிவுகள் குறித்து பரவும் ஆதாரம் இல்லாத தகவல்களை பொருட்படுத்த வேண்டாம் என்றும் இதுவரை இல்லாத அளவில் இத்தேர்வை மிக அதிகமான நபர்கள் எழுதியுள்ளதால் தேர்வு முடிவுகள் தாமதம் ஆகிறது என்று தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது