கடந்த சில நாட்களாக அரசு பள்ளிகளில் மாணவ மாணவிகளுக்கு காலை உணவு திட்டம் வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த திட்டத்தை அரசு நிதி பெறும் பள்ளிகளிலும் நீடிக்க திட்டமிட்டு இருப்பதாக மதுரை ஐகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கடலோர பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்றும் அவ்வாறு கொண்டு வந்தால் அந்த பகுதியில் உள்ள மாணவ மாணவிகள் பயன் பெறுவார்கள் என்றும் மதுரை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இதனை அடுத்து தமிழக அரசு இந்த மனுவுக்கு பதில் அளித்துள்ளது. தற்போது அரசு பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவு திட்டத்தை அரசு பள்ளிகள் மட்டுமல்லாது அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று கூறப்பட்டது.
இந்த பதிலை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கை முடித்து வைத்தனர்.