9 மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்கும் லேப்டாப் – தமிழக அரசு புதிய அறிவிப்பு…

Webdunia
செவ்வாய், 8 ஜனவரி 2019 (15:43 IST)
தமிழக அரசு சார்பில் அரசு மேனிலை மாணவர்கள் மற்றும் அரசு கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு மட்டும் வழங்கப்பட்ட இலவச லேப்டாப்கள் இனி 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2011-12 ஆம் ஆண்டு முதல் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் படிக்கும் மேனிலை அதாவது பிளஸ் ஒன், பிளஸ் டூ மாணவர்களுக்கும், அரசுக் கல்லூரி மாணவர்களுக்கும் தமிழக அரசு சார்பில் இலவசமாக லேப்டாப்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கும் இலவச லேப்டாப் வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

இத்திட்டத்தை முதன்முறையாக தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் ஈரோட்டில் முன்மொழிந்தார்.இதற்கான முன்மொழிதலை தயாரித்து அதை மத்திய அரசுக்கு அனுப்பி ஒப்புதல் பெறும்படி கல்வித்துறை அதிகாரிகளுக்கு செங்கோட்டையன் உத்தரவிட்டுள்ளார். இந்த திட்டத்தை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். மாபெரும் வெற்றி திட்டமான இதன் மூல இதுவரை 38 லட்சத்துக்கும் மேற்பட்ட மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்