இந்தியாவில் குறைந்த காலகட்டத்தில் விற்பனையில் சாதனை படைத்து முன்னணி நிறுவனங்களான சாம்சங், ஆப்பிள் ஆகியவற்றை பின்னுக்கு தள்ளியது சியோமி நிறுவனம்.
பட்ஜெட் ஸ்மார்ட்போன் விற்பனையில் இந்திய மார்க்கெட்டில் தனி இடத்தை பிடித்துள்ள சியோமி, தனது Mi ஏ2 ஸ்மார்ட்போனின் விலையை குறைப்பதாக நேற்று அறிவித்திருந்தது. தற்போது இதனை தொடர்ந்து ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலையை குறைப்பதாக அறிவித்துள்ளது.
ஆம், இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஒரு கோடி யூனிட்கள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளதால் இந்த விலை குறைப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
விலை: 4 ஜிபி ராம், 64 ஜிபி மெமரி ரூ.12,999; 6 ஜிபி ராம், 64 ஜிபி மெமரி ரூ.13,999. புதிய விலை குறைப்பட்ட ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட், அமேசான் மற்றும் சியோமியின் Mi வலைத்தளம் மற்றும் ஆஃப்லைன் விற்பனையகங்களில் கிடைக்கும்.