வடகிழக்கு பருவமழை மற்றும் வங்க கடலில் தோன்றும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, தென் மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது, இன்னும் சில நாட்களுக்கு அங்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று இரவு, இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், நாளை வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு உருவாக இருப்பதால், நவம்பர் 27ஆம் தேதி வரை, தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என்று தகவல் வெளியாகி உள்ளது.