மேனிலைக் கல்வி வரைத் தமிழை முதன்மைப் பாடமாகக் கொண்டு படித்து, இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல், பொருளாதாரம், புவியியல், வரலாறு, வணிகம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் முதுகலை முடித்த பட்டதாரிகள் இத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்வு எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வு என இரு கட்டங்களாக நடைபெறும் . தேர்வுக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் வழியாக மட்டுமே வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்கும் கடைசி நாள் அடுத்தாண்டு ஜனவரி 9 ஆகும். கட்டணம் கட்ட கடைசி தேதி ஜனவரி 11 ஆகும். (தேர்வுக்கட்டணம் 300 ரூ, பதிவுக் கட்டணம் -150 ரூ). 30 முதல் 40 வயது வரையுள்ள அனைத்து பட்டதாரிகளும் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு மார்சி மாதம் 2 ஆம் தேதி நடைபெறும். இப்பணிக்கான ஊதியமாக ரூ 56,900 முதல் 180500 வரை வழங்கப்படும்.