பொங்கல் வேட்டி, சேலை திட்டம்: ரேகை பதிவு கட்டாயம் என அறிவிப்பு..!

Webdunia
வெள்ளி, 14 ஜூலை 2023 (10:23 IST)
பொங்கல் தினத்தில் வழங்கப்படும் இலவச வேட்டி சேலைக்கான நிதியை ஒதுக்கீடு செய்த தமிழ்நாடு அரசு ரேஷன் கடைகளில் வேட்டி சேலைகளை வழங்கும்போது விரல் ரேகை பதிவு கட்டாயம் என்று அறிவித்துள்ளது. 
 
பொங்கல் வேட்டி சேலை திட்டத்திற்கு உற்பத்தி மற்றும் அனுமதி முன்பனமாக ரூபாய் 200 கோடி நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் வழங்க உள்ள வேட்டி சேலை திட்டத்திற்கு உத்தேச உற்பத்தி இலக்கு நிர்ணயம் செய்தும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மேலும் வேட்டி சேலைகளை விநியோகிக்கும் நடைமுறையை முடிவு செய்ய கூடுதல் தலைமைச் செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் ரேஷன் கடைகளில் வேட்டி, சேலை வழங்கும்போது விரல் ரேகை பதிவு கட்டாயம் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது 
 
இதனை அடுத்து இலவச வேட்டி சேலையை அந்தந்த நபர்களை வந்து வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்