''ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு உரிய சட்ட அங்கீகாரம்''- டிடிவி. தினகரன்
வியாழன், 18 மே 2023 (14:54 IST)
ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க கோரி பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்த வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு மகிழ்ச்சிளிப்பதாக டிடிவி. தினகரன் தெரிவித்துள்ளார்.
தமிழத்தில் பொங்கல் பண்டிகை ஒட்டி ஆண்டுதோறும் பாரம்பரியமான ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2017ம் ஆண்டில் அதிமுக ஆட்சிக் காலத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டு தடை செய்யப்பட்டது. இதற்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் பெரும் போராட்டங்கள் நடைபெற்றது.
பின்னர் ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் வகையிலான அவசர சட்டத்தை ஏற்படுத்தி, அப்போதைய அதிமுக அரசு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதித்தது. இந்நிலையில் ஜல்லிக்கட்டை தடை செய்யக் கோரி பீட்டா உள்ளிட்ட 15 அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தன.
இவ்வழக்கின் மீதான விசாரணை முடிந்து, இன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் தமிழக அரசின் அவசர சட்டம் செல்லும் எனவும், ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை விதிக்க முடியாது என்று தெரிவித்துள்ளது.
இது தமிழக மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழக முதல்வர் மற்றும் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இதை வரவேற்று தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அதன்படி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் தன் டுவிட்டர் பக்கத்தில்,
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த தடை இல்லை என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது.
இத்தீர்ப்பின் மூலம் தமிழர்களின் குறிப்பாக தென்மாவட்ட மக்களின் வாழ்வியலோடு ஒன்றிணைந்த ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு உரிய சட்ட அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.
தமிழகம் முழுவதும் தன்னெழுச்சியாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு துணை நின்ற அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக்கொள்கின்றேன் என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த தடை இல்லை என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது.
இத்தீர்ப்பின் மூலம் தமிழர்களின் குறிப்பாக தென்மாவட்ட மக்களின் வாழ்வியலோடு ஒன்றிணைந்த ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு உரிய சட்ட அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.