தனியார் பள்ளிகள் 75% கட்டணம் வசூலிக்க தமிழக அரசு அனுமதி !!

Webdunia
வெள்ளி, 17 ஜூலை 2020 (13:25 IST)
தனியார் பள்ளிகளில் 3 தவணைகளாக 75% கட்டணம் வசூலிக்க அனுமதி அளித்துள்ளது தமிழக அரசு. 
 
தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் இருப்பதால் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. 
 
தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டிருக்க வேண்டிய சூழலில் கொரோனா காரணத்தால் பள்ளி திறப்புகள் தள்ளி போவதால் தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்தி வருகின்றன.
 
இந்நிலையில் பள்ளி கட்டணம் வசூலிக்க கூடாது என தமிழக அரசு விதித்துள்ள தடை குறித்து நீதிமன்றத்தில் தனியார் பள்ளிகள் சங்கம் மனு அளித்தன. அதன் மீதான விசாரணையில் தனியார் பள்ளிகள் கல்வி கட்டணத்தை கட்ட பெற்றோர்களை வற்புறுத்த கூடாது என்றும், பெற்றோர்கள் தாமாக முன் வந்து கல்வி கட்டணத்தை வழங்கும் பட்சத்தில் வாங்க தடையில்லை என்றும் விளக்கியது. 
 
இதனைத்தொடர்ந்து தற்போது தனியார் பள்ளிகளில் 3 தவணைகளாக 75% கட்டணம் வசூலிக்க அனுமதி அளித்துள்ளது தமிழக அரசு. அதாவது தற்போது 25%, பள்ளிகள் திறக்கும் போது 25%, அடுத்த 3 மாதங்களுக்கு பின்னர் 25% என கட்டணத்தை வசூலிக்க அனுமதி அளித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்