மனைவியுடன் உல்லாசம்! உயிர் நண்பனின் உயிரை எடுத்த கணவன்! - கர்நாடகாவில் அதிர்ச்சி!

Prasanth K

வியாழன், 10 ஜூலை 2025 (10:36 IST)

கர்நாடகாவில் தனது மனைவியுடன் தவறான உறவுக் கொண்டிருந்த நண்பனை கொலை செய்துவிட்டு நபர் ஒருவர் போலீஸில் சரணடைந்துள்ளார்.

 

கர்நாடகா மாநிலம் கமலாப்புராவில் உள்ள முரடி கிராமத்தை சேர்ந்தவர் அம்பரீஷ். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளது. அதே கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி அஜய். அம்பரீஷூம், அஜய்யும் நீண்ட கால உயிர் நண்பர்களாக இருந்து வந்த நிலையில், அம்பரிஷ் வீட்டிற்கு அஜய் செல்வதும் வருவதும் வழக்கமாக இருந்துள்ளது.

 

அப்படியாக அம்பரிஷ் வீட்டிற்கு செல்லும் அஜய்க்கு, அம்பரிஷ் மனைவியுடன் தவறான உறவு ஏற்பட்டுள்ளது. வீட்டில் அம்பரீஷ் இல்லாதபோது அங்கு செல்லும் அஜய், அம்பரீஷ் மனைவியுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். நாளடைவில் இந்த விஷயம் அம்பரீஷ்க்கு தெரிய வர மனைவியையும், அஜய்யையும் கண்டித்துள்ளார். ஆனாலும் இருவரும் தொடர்ந்து கள்ள உறவில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

 

ஒரு கட்டத்திற்கு மேல் இதை பொறுக்க முடியாத அம்பரீஷ், அஜய்யை பேச வேண்டும் என சொல்லி காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று அங்கு அஜய்யை குத்திக் கொலை செய்துள்ளார். அதன் பின்னர் அவரே காவல் நிலையத்திற்கும் போன் செய்து விஷயத்தை சொல்லி சரண்டர் ஆகிவிட்டார். இந்த வழக்கில் அம்பரீஷ்க்கு உதவிய அவரது நண்பர் ஒருவரை போலீஸார் தேடி வருகின்றனர். தவறான உறவால் நண்பனை சக நண்பனே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்