அமெரிக்க அதிபர் டிரம்பை கொல்வது மிக எளிது: ஈரான் தலைவர் கருத்துக்கு காமெடி பதில் சொன்ன டிரம்ப்!

Mahendran

வியாழன், 10 ஜூலை 2025 (10:29 IST)
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சூரிய குளியலில் ஈடுபடும்போது ட்ரோன் மூலம் அவரை கொல்வது மிகவும் எளிது என ஈரானின் மூத்த ஆலோசகர் ஜாவத் லாரிஜானி என்பவர் கூறி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இஸ்ரேல் - ஈரான் போரின்போது அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்பட்டது, அதன் பின் அமெரிக்க அதிபரின் தலையீட்டால் போர் நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில், ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதை ஈரான் இன்னும் மறக்கவில்லை என்றும், அமெரிக்காவுக்கு எதிராகச் சில நடவடிக்கைகள் எடுக்கலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது. 
 
இந்த சூழலில், ஈரான் நாட்டின் ஆட்சியாளரின் மூத்த ஆலோசகர் ஜாவத் லாரிஜானி, அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது புளோரிடாவில் உள்ள வீட்டில் நீண்ட நேரம் சூரிய குளியல் போடுகிறார் என்றும், அந்த நேரத்தில் அவரை ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தினால் மிக எளிதாக கொன்றுவிடலாம் என்றும் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்த மிரட்டல் குறித்து டிரம்ப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, "சூரிய குளியல் மீது எனக்கு நம்பிக்கை இல்லை" என்றும், "கடைசியாக 7 வயதில் சூரிய குளியல் போட்டதாகவும், அதன் பின் தான் சூரிய குளியலில் ஈடுபடவில்லை" என்றும் அவர் காமெடியாக தெரிவித்தார்.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்