ப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸை உடனடியாக கலைக்க வேண்டும்: தமிமுன் அன்சாரி!

வியாழன், 2 ஜூலை 2020 (15:08 IST)
சாத்தான்குளம் சம்பவத்திற்கு பிறகு ப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பை மக்கள் பலர் எதிர்த்து வருகின்றனர். 
 
சாத்தான்குளம் செல்போன் கடை உரிமையாளர் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ராஜ் ஆகியோரை போலீஸார் விசாரணைக்கு அழைத்து சென்ற நிலையில் அவர்கள் உயிரிழந்த சம்பவம் தேசிய அளவில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
இதுகுறித்து தாமாக முன் வந்து விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை மாஜிஸ்திரேட் அறிக்கை மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கையை வைத்து உடனடி விசாரணையை மேற்கொள்ள சிபிசிஐடிக்கு உத்தரவிட்டது. அதன்படி கொலைவழக்கு பதிவு செய்யப்பட்டு 6 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 
 
இந்நிலையில் இந்த சம்பவத்தில் ப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பில் உள்ளவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. ப்ரெண்ட்ஸ் ஆப் போலீஸ் என்ற அமைப்பு சமுதாய சேவையின் நோக்கில் காவலர்களுக்கு உதவியாக இருக்க உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு ஆகும்.
 
இந்நிலையில் சாத்தான்குளம் சம்பவத்திற்கு பிறகு ப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பை மக்கள் பலர் எதிர்த்து வருகின்றனர். அந்த வகையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செய்லாளர் தமிமுன் அன்சாரி தனது அறிக்கையில் ப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பை அரசு உடனடியாக கலைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்