ஈபிஎஸ் ஓபிஎஸ் சொத்து பட்டியலையும் அண்ணாமலை வெளியிட வேண்டும்: டிகேஎஸ் இளங்கோவன்

Webdunia
திங்கள், 3 ஏப்ரல் 2023 (14:21 IST)
திமுக அமைச்சர்களின் சொத்து பட்டியலை ஏப்ரல் 14ஆம் தேதி வெளியிடுவேன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ள நிலையில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர் செல்வம் ஆகியவர்களின் சொத்து பட்டியலையும் அண்ணாமலை வெளியிட வேண்டும் என திமுக செய்தி தொடர்பாளர் டி கே எஸ் இளங்கோவன் பேட்டி அளித்துள்ளார்.
 
எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் சொத்து பட்டியலையும் அண்ணாமலை வெளியிட வேண்டும் என்றும் அண்ணாமலை வெளியிடும் பட்டியலுக்காக நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார். 
 
மேலும் எடப்பாடி பழனிச்சாமிக்கு சட்டமே தெரியாது என்று நினைக்கிறேன் என்றும் நாங்களே ஆட்சியை கலைத்தால்தான் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தல் வரும் என்றும் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற நடைமுறையை சாத்தியமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்