அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என நான் ஒருபோதும் கூறவில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிமுக கூட்டணியில் பாஜக இணைந்தால் தமிழக தலைவர் பதவியில் இருந்து விலகுவேன் என்று அண்ணாமலை கூறியதாக செய்திகள் வெளியானது. ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன் உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக கூட்டணியில் தான் பாஜக உள்ளது என்று தெரிவித்திருந்தார்.