இதற்குப் பதிலளித்த முதல்வர் முக.ஸ்டாலின், பழக்கடை நடஹ்தி வரும் ஞாசேகருக்கு சாந்தி என்ற மனைவியும், ராஜசேகார், வல்லரசு என்ற இரு மகன்கள் உள்ளனர். ஞானசேகருக்கு வேறொரு பெண்ணிடம் தொடர்பு ஏற்பட்டதியால், வீட்டிற்குப் பணம் கொடுப்பதில்லை என்று சாந்தி தன் மகன்களிடம் கூறியுள்ளார்.
இதுபற்றி தங்கள் தந்தையிடம் கேட்க வல்லரசு மற்றும் ராஜசேகர் சென்றுள்ளனர். அப்போது பழக்கடையில், அவர் இல்லாததால், இப்பிரச்சனையில் இப்ராஹிம் தலையிட்டுள்ளார். அவரை வல்லரசு மற்றும் ராஜசேகர் கத்தியால் குத்தியுள்ளனர். இதில், காயமடைந்த இப்ராஹிம் உயிரிழந்தார். இக்கொலை சம்பவத்தில் ஈடுபட்ட ராஜசேகர் மறும் வல்லரசை போலீஸர் கைது செய்துள்ளனர் என்று கூறினார்.
இந்த நிலையில், பாஜக தலைவர் அண்னாமலை தன் டுவிட்டர் பக்கத்தில்,
விழுப்புரத்தில் தமிழக முதல்வர் திரு முக.ஸ்டாலின் படம் பொறித்த பனியன் அணிந்த திமுக ரவுடிகள், பட்டப்பகலில் சூப்பர் மார்க்கெட்டில் இப்ராஹிம் ராஜா என்ற சகோதரரைக் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளனர்.