திருவான்மியூர் ரயில் நிலையத்தில் கொள்ளை! – தனிப்படை அமைத்த போலீஸார்!

Webdunia
திங்கள், 3 ஜனவரி 2022 (11:36 IST)
சென்னை திருவான்மியூர் ரயில் நிலையத்தில் மர்ம நபர்கள் புகுந்து கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் திருவான்மியூரில் புறநகர் ரயில் நிலையம் இயங்கி வருகிறது. நேற்று இரவு இந்த ரயில் நிலையத்திற்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இருவர், டிக்கெட் வழங்குபவர் மற்றும் ரயில் நிலைய பணியாளர் ஒருவரை துப்பாக்கியை காட்டி மிரட்டி கை, கால்களை கட்டிப் போட்டுள்ளனர்.

பின்னர் டிக்கெட் கவுண்டரிலிருந்து சுமார் ரூ.2 லட்சத்தை கொள்ளையடித்துக் கொண்டு அவர்கள் தப்பி சென்றுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் மர்ம கும்பலை பிடிக்க 2 தனிப்படைகளை அமைத்துள்ளனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீஸார் தீவிரமாக ஆய்வு செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்