முன்னாள் காதலி தூங்கியபோது ரூ.18 லட்சம் திருடிய இளைஞர் கைது!

செவ்வாய், 14 டிசம்பர் 2021 (14:27 IST)
முன்னாள் காதலி தூங்கிக் கொண்டிருந்த போது அவரது மொபைல் போனில் இருந்து 18 லட்ச ரூபாயை தனது வங்கி கணக்குக்கு மாற்றிக் கொண்ட இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்
 
சீனாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஒரு இளைஞரை காதலித்து வந்தார். இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். இந்த நிலையில் அந்த இளைஞர் தனது காதலிக்கு அதிகமாக செலவு செய்ததை அடுத்து அந்த பணத்தை மீட்க வேண்டும் என்பதற்காக தனது முன்னாள் காதலியை தூங்கிக் கொண்டிருந்தபோது அவரது செல்போனை அன்லாக் செய்து சுமார் 18 லட்சத்தை தனது வங்கி கணக்கிற்கு மாற்றி கொண்டதாக தெரிகிறது 
 
மாத்திரை சாப்பிட்டு தூங்கி எழுந்த அந்த இளம்பெண் காலையில் கண்விழித்து பார்த்தபோது  தனது வங்கி கணக்கில் இருந்து பணம் மாற்றப்பட்ட குறுஞ்செய்தியை பார்த்து அதிர்ச்சி அடைந்தார் 
 
இதனை அடுத்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் காதலியின் பணத்தை சுருட்டிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்