இந்த நிலையில், ஆசிரியை ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ரூ.50,000 பிணைத்தொகைக்கு அவருக்கு ஜாமீன் வழங்கியது.
ஜாமீன் நிபந்தனைகளின்படி, பாதிக்கப்பட்ட மாணவரை ஆசிரியை சந்திக்க கூடாது என்றும், எந்த ஒரு சாட்சியையும் அல்லது புகார்தாரரையும் அச்சுறுத்த கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆசிரியை தனது ஜாமீன் மனுவில், இந்த வழக்கு பொய்யானது மற்றும் ஜோடிக்கப்பட்டது என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், சிறுவனின் தாயின் தூண்டுதலின் பேரில்தான் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார். சிறுவன் மீது தனக்கு ஆழ்ந்த பாசம் இருந்ததாகவும், மாணவனை சில செல்லப் பெயர்கள் பயன்படுத்தி அழைத்ததாகவும், அது தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாகவும் ஆசிரியை தரப்பிலிருந்து வாதிடப்பட்டது.
இந்த ஜாமீன் மனுவை அரசு தரப்பு கடுமையாக எதிர்த்தபோதிலும், நீதிமன்றம் ஆசிரியைக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. 16 வயது மாணவன் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட நிலையில், குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியைக்கு இவ்வளவு எளிதாக ஜாமீன் கிடைத்திருப்பது, பாதிக்கப்பட்ட மாணவனின் குடும்பத்தினருக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.