மாஸ்க் அணியாத நபரிடம் ஜாதி பெயரை கேட்ட காவலர் மீது நடவடிக்கை!

Webdunia
வெள்ளி, 9 அக்டோபர் 2020 (10:24 IST)
மாஸ்க் அணியாத நபரிடம் ஜாதி பெயரை கேட்ட காவலர் மீது நடவடிக்கை!
மாஸ்க் அணியாமல் சாலையில் வந்த நபர் ஒருவரிடம் ஜாதி பெயரை கேட்ட காவலர் ஒருவர் மீது அதிரடியாக எஸ்பி நடவடிக்கை எடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது
 
கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி வருவதை அடுத்து வெளியே வரும் பொதுமக்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும் என தமிழக சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும் மாஸ்க் அணியாமல் வெளியே வரும் நபர்களுக்கு கண்டிப்பாக அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் என்ற பகுதியை சேர்ந்த ஒருவர் மாஸ்க் அணியாமல் வந்ததை அடுத்து அவரிடம் காவலர் காசிராஜன் விசாரணை செய்துள்ளார். அப்போது அவர் ஜாதி பெயரை கேட்டதாக தெரிகிறது. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது அடுத்து ஜாதி பெயரை கேட்ட காவலர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர் 
 
இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து மாஸ்க் அணியாமல் வந்த நபரிடம் ஜாதி பெயரை கேட்ட காவலர் காசிராஜன் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை திருப்பூர் மாவட்ட எஸ்பி அவர்கள் எடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது  

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்