கொலை வழக்கில் தப்பிய ஆசாமி; வழிப்பறியில் சிக்கிய சம்பவம்!

Webdunia
வெள்ளி, 20 மே 2022 (12:04 IST)
திருப்பூரில் இரட்டை கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த நபர் வழிப்பறி செய்ய முயன்றபோது சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூரில் யுனிவர்சல் தியேட்டர் ரோட்டில் உள்ள பேருந்து நிலையத்தில் சென்று கொண்டிருந்த இளைஞர் ஒருவரை வழிமறித்த ஆசாமி, கத்தியை காட்டி மிரட்டி பணத்தை கொடுக்குமாறு மிரட்டியுள்ளார்.

இளைஞர் மறுக்கவே அவரது கையில் கத்தியால் கிழித்துள்ளார் அந்த ஆசாமி. இதனால் இளைஞர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார். இளைஞர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வழிப்பறி ஆசாமியை பிடித்துள்ளனர்.

பிடிபட்டவர் திருப்பூர் மண்ணரையை சேர்ந்த ராஜசேகர் என தெரிய வந்துள்ளது. மேலும் அவர் மீது இரட்டை கொலை வழக்கு உள்பட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதும், ஜாமீனில் வெளிவந்த அவர் தலைமறைவாக இருந்து வந்ததும் தெரிய வந்துள்ளது. அவரை கைது செய்துள்ள போலீஸார் சிறையில் அடைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்