காதலை மறுத்த பெற்றோர்; காதலனுடன் பள்ளி சிறுமி தற்கொலை!

புதன், 27 ஏப்ரல் 2022 (09:39 IST)
திருப்பூரில் சிறுமியின் காதலை பெற்றோர் மறுத்ததால் காதலனுடன் சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள கைக்காட்டி புதூர் பகுதியை சேர்ந்தவர் 23 வயதான அஜய். இவரும் அதே பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு படிக்கும் 15 வயது பள்ளி சிறுமியும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர்.

இந்த விவகாரம் சிறுமியின் தாய்க்கு தெரிய வர அவர் சிறுமியை கண்டித்துள்ளார். ஆனால் காதலை பிரிய மனமில்லாத சிறுமி திடீரென வீட்டிலிருந்து மாயமாகியுள்ளார். சிறுமியை காணததால் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்நிலையில் திருப்பூர் ஆத்துப்பாளையம் செல்லும் சாலை அருகே உள்ள பயன்படாமல் உள்ள கிணறு ஒன்றில் பெண் ஒருவரின் சடலம் மிதப்பதாக அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் அனுப்பியுள்ளனர்.

நேரில் சென்று உடலை மீட்ட போலீஸார் அது காணாமல் போன சிறுமி என கண்டறிந்துள்ளனர். மேலும் கிணற்றில் தேடியதில் சிறுமியின் காதலன் அஜய் உடலும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த தற்கொலை சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்