இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் மீண்டும் மீண்டும் தவறு செய்கிறார்கள்: சீமான்

Siva

ஞாயிறு, 12 ஜனவரி 2025 (13:50 IST)
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது திமுகவுக்கு வாக்குகளை செலுத்தி இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மீண்டும் மீண்டும் தவறு செய்கிறார்கள் என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே பெரியார் குத்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சீமான் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பொங்கல் திருநாள் அன்று ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் அறிவிப்பு வெளியாகும் என்றும் திமுகவை எதிர்த்து நாங்கள் போட்டியிடுவோம் என்று அவர் தெரிவித்தார்.

மேலும் பெரியார் மற்றும் அம்பேத்கர் ஆகிய இருவரையும் ஒப்பிடுவதை நிறுத்துங்கள் என்றும் பெரியார் குறித்து பொதுவெளியில் விவாதம் நடத்த நான் தயார் என்றும் விவாதம் நடத்த வருபவரை இரு கை கூப்பி வரவேற்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும்  திமுகவுக்கு வாக்கு செலுத்தி இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் மீண்டும் மீண்டும் தவறு செய்கிறார்கள் என்று அவர் தெரிவித்தார். மேலும் தேர்தல் ஜனநாயக முறையில் நடைபெறவில்லை என்றும் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவே தேர்தலில் இருந்து பின் வாங்குகிறது என்றால் எந்த அளவுக்கு கொடுமையான ஜனநாயகம் இருக்கிறது என்பதை உணர்த்துகிறது என்றும் அவர் கூறினார்.


Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்