தங்கை முறை பெண்ணுடன் காதல்; திருமணம் செய்த ஜோடிகளுக்கு நேர்ந்த சோகம்!

Webdunia
திங்கள், 14 டிசம்பர் 2020 (11:12 IST)
திருநெல்வேலியில் தங்கை முறை பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட நபர் கொல்லப்பட்ட நிலையில், இளம்பெண்ணும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி பழையப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் காளிராஜ். இவரும் இவரது உறவினரும், தங்கை முறையுமான மேகலா என்ற பெண்ணும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். இந்த விவகாரம் பெண் வீட்டிற்கு தெரிய வர அவர்கள் பெண்ணின் காதலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பெற்றோர் சம்மதத்தை மீறி திருமணம் செய்து கொண்ட காதல் தம்பதியினர் திருநெல்வேலி சட்ட கல்லூரி அருகே உள்ள ரஹ்மத் நகரில் குடியேறியுள்ளனர்.

இந்நிலையில் சமீபத்தில் காளிராஜை மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான அவர் மனைவி மேகலா தனியார் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தற்போது மேகலாவும் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதல் தம்பதியினர் இறந்த விவகாரம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்